Description
இந்நூல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் அவ்வப்போது நடைபெற்ற நிகழ்வுகள், இஸ்லாமியப் பாரம்பரிய வாழ்வியல் நடைமுறைக் கதைகள், நூலாசிரியரின் வாழ்க்கையில் நடைபெற்ற சிந்தனையைத் தூண்டக்கூடிய செய்திகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சீரிய தொகுப்பாகும்.
வாசகர்கள் தம்முடைய சுய முன்னேற்றங்களையும் சுய திறன்களையும் பயன்படுத்தி, தம் வாழ்க்கையை அனுபவித்து வாழப் பயிற்சி கொடுப்பதே இந்நூலின் நோக்கமாகும்.
இந்நூல் நம்மை ஈர்க்கக் காரணம், இந்நூலாசிரியர் சமூகத் திறன்களைப் பயன்படுத்தி, அதன் பயன்களை நம்முன் காட்ட, நபி அவர்களின் வாழ்க்கை முறையையும் அவர்கள்தம் தோழர்களின் வாழ்க்கை முறையையும் கொண்டுவந்து கொட்டுகிறார்.
இந்நூல் சுய முன்னேற்றத்தை மேம்படுத்திக்கொள்வதற்கான வழியைக் காட்டுவதோடு வரலாற்று நிகழ்வுகள் பலவற்றையும் கொண்டுள்ளது. சுய விழிப்புணர்வை அதிகப்படுத்துகிறது. உள்ளத்தை மேம்படுத்தி உணர்வுகளை ஊக்கப்படுத்துகிறது.
Reviews
There are no reviews yet.