Additional information
| Weight | .445 kg |
|---|---|
| Pages | 328 |
| Binding | Paper Back |
| Author | A M Syed Mohamed Jamaly |
| Publisher | Kugaivasigal |
₹ 350
பெரும்பாலும் ‘கதை சொல்லுதல்’ என்றாலே பொய் சொல்லுதல் எனப் புரிந்துகொள்வார்கள். எதார்த்தம் அப்படித்தான் இருக்கிறது. ‘அவனை நம்பாதீர்கள். கதை சொல்கிறான்’ எனச் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால், குர்ஆனும் நபிமொழியும் சொல்லியிருப்பவை உண்மைக் கதைகள். அதனால் நம்பித்தான் ஆக வேண்டும். இது நமது இறைநம்பிக்கையின் அம்சம்.
அல்லாஹ்வும் அவனது தூதரும் உண்மையே சொல்வார்கள். அவர்களைப் பொய்ப்பிப்பது அவர்களை நிராகரிப்பதாகும். அவர்களைப் பின்பற்றி நாமும் உண்மை சொல்ல வேண்டுமானால், இந்நூலின் கதைகளிலுள்ள உண்மைகளைப் பரப்ப வேண்டும்; படிப்பினை பெற வேண்டும். நீதி போதனைகள் இவற்றின் வழியாகப் போதிக்கப்பட வேண்டும்.
இது குழந்தைகளுக்கு உரியது என நினைத்துவிடக் கூடாது. நபியவர்கள் தம் தோழர்களுக்கு இவற்றைச் சொன்னார்கள். அப்படியானால் பெரியவர்கள்தாம் முதலில் இவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். பின்பு அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் மற்றவர்களுக்கும் நினைவூட்ட வேண்டும்.
ஆக, முழு மனித சமுதாயமும் பலனடையக்கூடிய பயனுள்ள கல்வியைத் தரும் கதைகள் இவை. நமது நேரம் இந்த உலகத்திற்காக மட்டுமின்றி மறுமை வாழ்க்கைக்காகவும் தரப்பட்டுள்ளது. அங்கு நல்லபடி இருக்க இங்குள்ள நேரத்தைப் பயன்படுத்த வேண்டும். அங்குப் பலனளிக்காத கதைகளை வாசித்து நேரத்தை வீணடித்துவிடக் கூடாது.
| Weight | .445 kg |
|---|---|
| Pages | 328 |
| Binding | Paper Back |
| Author | A M Syed Mohamed Jamaly |
| Publisher | Kugaivasigal |
Reviews
There are no reviews yet.