Sale!

தொழுகையின் தாக்கங்கள்

 99

முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழுகிறார்கள். இந்த தொழுகையின் தாக்கம் அவர்களின் வாழ்வில் வெளிப்பட வேண்டும். வாழ்க்கை தூய்மையானதாக, நல்ல ஒழுக்கங்கள் நிரம்பியதாக, இறைநம்பிக்கை பலமானதாக மாற வேண்டும். குறிப்பாக, உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் உருவாக வேண்டும். இது பற்றிய நூல்.

Description

தொழுகை நம்மைப் படைத்தவனின் மாபெரும் விண்ணுலகக் கொடை. வெறுங்கையுடன் மிஅராஜ் பயணம் சென்ற நமது நாயகம் (ஸல்) நமது இரட்சகனிடம் உரையாடிவிட்டுத் தொழுகையுடன் பூமிக்குத் திரும்பினார்கள். அன்றிலிருந்து நமது இரட்சகனிடம் நாம் உரையாடிக்கொள்ள கிடைத்த ஒரே  வானம் தொழுகைதான். ஆனால், நாமோ தொழுகையின்போதும் பூமிப் பந்தை உருட்டிக்கொண்டிருக்கிறோம். உலகில் எத்தனையோ உறவுகள் நமக்கு இருக்கலாம். ஆனால், நாம் ஆதரவற்று தனிமைப்படுத்தப்படவில்லை; நமது இரட்சகனுடன் தொடர்பில் இருக்கிறோம் என்பதைத் தொழுகை உணர்த்துகிறது. இரத்த உறவோ, திருமண உறவோ, நட்பு வட்டமோ அளிக்காத அந்தரங்கப் பிடிமானத்தை, பாதுகாப்பு வளையத்தை, மனநோய்களுக்கு மருந்தை, ஏக்கங்களுக்கு ஆறுதலை, ஷைத்தானிய முடிச்சுகளுக்கு முறியடிப்பை ஒட்டுமொத்த எழுச்சியுடன் அது வழங்குகிறது. இதன் தாக்கம்தான் முஸ்லிம் வாழ்க்கையின் திறந்த புத்தகம். ஆனால், நமது வாழ்க்கைப் பக்கங்கள் தொழுகையால் புரட்டப்படாமல் மனஇச்சைகளால் சிதைந்து படபடத்துக்கொண்டிருக்கிறது. ஷெய்க் ஹுசைன் அல்அவாஇஷா இந்தப் புத்தகத்தில் தொழுகையின் சட்டங்களை விவரிக்கவில்லை. அதன் தாக்கங்களால் வாழ்க்கையை மாற்றும் திட்டங்களை விவரிக்கிறார்கள்.

தொழுகையின் காரியம் சீராக இருப்பதற்காக அல்லாஹுத் தஅலாவைக் கவனத்தில் வைப்பது அவசியம். இவ்வுலகத்தை நமது முதுகுகளுக்குப் பின்னால் வைப்பது அவசியம். தான் பேசும் வார்த்தைகளெல்லாம் ஒட்டுக் கேட்கப்படுகிறது. நிச்சயமாக அது ஆட்சியாளரைச் சென்றடையும் என்று ஒரு மனிதர் அறிந்திருந்தால், அவர் என்ன சொல்வார், எப்படிப் பேசுவார்? எழுத்துக்களையும் வார்த்தைகளையும் அவர் எடைப் போட்டுப் பேசுவதை நீங்கள் காணமாட்டீர்களா? அப்படியானால் எதுவும் அவனுக்கு மறைந்ததல்ல என்ற நிலையில் அனைத்தையும் செவியேற்பவனாகவும் பார்ப்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கக்கூடியவனின் முன்னிலையில் நிற்பவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

Additional information

Weight .2 kg
Author

ஷெய்க் ஹுஸைன் இப்னு அவ்தா அல்அவாஇஷா

Name in Arabic

الصَّلاَةُ وَأَثَرُهَا فِي زِيَادَةِ الْإِيمَانِ وَتَهْذِيْبِ النَّفْسِ

Pages

136

Name in English Literation

Thozhugaiyin Thaakkangal – Irai nambikkai Kooduvathilum Ulachcheerthiruthathillum

Reviews

There are no reviews yet.

Be the first to review “தொழுகையின் தாக்கங்கள்”

Your email address will not be published. Required fields are marked *