Description
இமாம் புகாரீ (ரஹ்) அவர்களால் தொகுத்து அளிக்கப்பட்ட இன்னொரு பொற்களஞ்சியம்தான் “அல்அதபுல் முஃப்ரத்” ஹதீஸ் நூலாகும்.
புகாரீயில் இடம்பெறாத அரிய பல ஹதீஸ்களையும், நிகழ்வுகளையும் இமாம் புகாரீ அவர்கள் இத்தொகுப்பில் கொடுத்துள்ளார்கள். ஸஹீஹ் என்ற உயர் தரத்தைப் பெற்ற நபிமொழிகளை மட்டுமே பதிவு செய்துள்ள இமாமவர்கள், அவர் வகுத்துள்ள கடுமையான விதிகளிலிருந்து தளர்ந்து காணப்பட்ட அறிவிப்புகளை இந்நூலில் கொடுத்துள்ளார்கள்.
மனித வாழ்க்கைக்குத் தேவையான சிறு சிறு நிகழ்வுகளை தாங்கியுள்ள இந்நூலில் அரிய நபிமொழிகள், நபித்தோழர்கள், தாபியீன்களின் பலனுள்ள பொன்மொழிகள் மற்றும் நிகழ்வுகள் இமாம் நாஸிருத்தீன் அல்பானீ (ரஹ்) அவர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றையும் இந்நூலில் பதிவு செய்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!
Reviews
There are no reviews yet.